டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்கிறார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த கெஜ்ரிவால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். அதன்படி இன்று மாலை 4.30 மணிக்கு துணைநிலை ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்குகிறார்.