மோடியா லேடியா மோதி பார்ப்போம் என ஜெயலலிதா கடும் சவால் விட்டார். ஆனால் இன்று அதே மோடியிடம் எடப்பாடி பழனிச்சாமி கொஞ்சி குழாவுவதாக திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உட்பட 6 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், எந்த கொம்பனாலும் அதிமுக-வை கபளீகரம் செய்ய முடியாது என எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.அதிமுக-பாஜக இடையே அவ்வப்போது வார்த்தைபோர் ஏற்படும் சூழலில், ஈபிஎஸ்-ன் துணிச்சலான கருத்தை பாராட்டுவதாக கூறினார். தேர்தலுக்காக திமுக-வுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறோம் என விசிக-வை குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும் அவர் கூறினார்.