ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதனால் நாயப் சிங் சைனியை மீண்டும் முதலமைச்சராக அறிவிக்க முடிவு செய்திருப்பதாக பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது.