அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடிப்பது எவ்வளவு முக்கியமானதோ, அதுபோல திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதியை பெறுவதும் தங்களுக்கு முக்கியமானது என்று சிபிஎம் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 98 புள்ளி 5 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக திமுக சொல்கிறது என்றால், அவர்களது கணக்கு வழக்கில் பிரச்னை உள்ளதாக விமர்சனம் செய்தார். திமுக தலைமையிலான கூட்டணியில் 2026 தேர்தலை சந்திக்க முடிவெடுத்துள்ளதாக கூறியவர், அதிமுக- பாஜக கூட்டணியை தோற்கடிக்கும் வகையில் தங்களின் அரசியல் அணுகுமுறை இருக்கும் என்றார்.