விசிக தலைவர் திருமாவளவன் திமுகவுடன் கொள்கையில் முழுமையாக ஒத்துப்போகிறாரா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதிமுக துணை பொதுசெயலாளர் கே.பி முனுசாமி வலியுறுத்தியுள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜாதிய சக்திகளோடும் மதவாத சக்திகளோடும் ஒருபோதும் தேர்தல் கூட்டணி கிடையாது என்ற விசிக தலைவர் திருமாவளவன் கருத்துக்கு பதிலளித்தார்.