எங்கும் எதிலும் ஊழல் என குறைகள் மட்டுமே நிறைவாக இருக்கும் ஒரு அவல ஆட்சி தமிழகத்தில் நடந்துகொண்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்த அவர், குறைகளை நன்கு உணர்ந்து கொண்டதால் தான் திசை திருப்ப வரிசையாக நாடகங்களை அரங்கேற்றுவதாக விமர்சித்துள்ளார். மேலும் ஜீவாதாரப் பிரச்சனையான காவிரி நதிநீர் உரிமை குறித்து ஒரு தீர்மானம் கூட கொண்டு வராதது எஜமான விசுவாசமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மேகதாது அணை தமிழ்நாட்டுக்கு நன்மை தரும் என்று தமிழ்நாட்டிலேயே கர்நாடக முதல்வரை பேசவிட்டு வேடிக்கை பார்த்த கொத்தடிமைகள் தானே நீங்கள்? எனவும் காட்டமாக பதிவிட்டுள்ளார்