தமிழர்களுக்கு சொந்தமான செஞ்சி கோட்டையை மராட்டியர்களின் கோட்டை என யுனெஸ்கோ அமைப்பின் மூலம் அறிவிக்கும் முயற்சியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். தமிழர் வரலாற்றை திரிக்கும் இந்த கொடுஞ் செயலை தமிழ்நாடு அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றவர், செஞ்சிக்கோட்டை மராட்டியரின் கோட்டை என்ற வரலாற்று புரட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து, வழி மொழிந்துள்ளது வெட்கக்கேடானது என காட்டமாக தெரிவித்துள்ளார். கீழடி மட்டும்தான் தமிழர் அடையாளமா? செஞ்சிக்கோட்டை தமிழர் அடையாளம் இல்லையா? எனவும் சீமான் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.