நியாய விலைக் கடைகள் அனைத்தையும் ஒரே துறைக்குள் கொண்டு வராதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே திமுக அரசுக்கு தொழிலா? என கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கூட்டுறவு, உணவுத் துறை உள்ளிட்ட பல துறைகளின் கீழ் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருவதாகவும், ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம் போன்ற கோரிக்கைகள் நிறைவேறவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், வாக்குறுதி என்ன ஆனது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.இதையும் படியுங்கள் : கட்டுமான பொருட்களின் விலை நிர்ணயம் குறித்த பட்டியல்..