தவெகவின் கொள்கை எதிரி பட்டியலில் அதிமுக இருக்கிறதா? என விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார். திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தபோது செய்தியாளர்களை சந்தித்த அவர், பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக விஜயின் போராட்டம் குடியிருப்புகளை அகற்றவிடாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்று தருமேயானால் அதனை வரவேற்பதாக தெரிவித்தார்.