சினிமாவில் வாழ்க்கை கொடுத்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருந்தால் நல்லா இருக்குமா? என யோசித்து முடிவு எடுத்துதான் அரசியலில் நுழைந்தாக தவெக மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய் தெரிவித்தார். இந்த நிலையில், அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்திருந்த நடிகர் ரஜினியை, விஜய் மறைமுகமாக தாக்கிப் பேசியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.