தமிழ்நாட்டில் 38 ஆயிரத்து 600 கோடி ரூபாயில் 14 புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு இதன் மூலம் 47 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். மின்னணு, மென்பொருள், பாதுகாப்பு உபகரணம், பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா உள்ளிட்ட துறைகள் சார்ந்த 14 புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சரவையில் புதிதாக செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடதக்கது.