முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இபிஎஸ் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ள நிலையில், மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கப்பூர்வமாக அதிமுக செயல்பட வேண்டுமென அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.