மக்கள் பாதுகாப்பு குறித்த விவகாரங்களில் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள இபிஎஸ், நாட்டு வெடிகள் தயாரித்து வந்ததை அரசும், காவல்துறையும் அறிந்திருக்காமல் இருந்தது ஏன்? என வினவியுள்ளார்.