சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பள்ளிக்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரைவான நீதிவிசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கல்விக்கூடங்கள் கொலைக் களமாக மாறி நிற்பதாகவும், பள்ளிக் குழந்தைகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மக்களை காக்க வேண்டிய காவல் நிலையங்களே மக்களைக் கொல்லும் கொலைக்களங்களாக மாறி நிற்பதாகவும், நீதியைப் பெற்றுத்தர வேண்டிய அரசு கொலை செய்யப்பட்ட குடும்பத்தினரிடம் பேரம் பேசுவதாகவும் விமர்சித்தார்.