அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது போடப்பட்ட பொய் வழக்கை சட்டரீதியாக எதிர் கொள்ளப்போவதாக என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், தன் மீது அன்பையும், நம்பிக்கையும் வைத்த முதலமைச்சருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவேன் என நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.