திமுகவின் கொத்தடிமை என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், தன்னை விமர்சித்துள்ளதற்கு, அதிமுகவில் இருந்த போதும் விசுவாசமாக, தான் இருந்ததாக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் நடந்த கவிநாடு கண்மாய் மறுசீரமைப்பு மற்றும் குறுங்காடு அமைக்கும் பணியில் கலந்த கொண்டவர் செய்தியாளர்களை சந்திப்பில் இதனை கூறினார். எம்-சாண்ட், பி-சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களின் விலை உச்சநீதிமன்ற தீர்ப்பில் அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறியவர், மேலும் விலையை எந்த அளவிற்கு குறைக்க முடியுமோ, அந்தளவிற்கு குறைக்கக் கூடிய நடவடிக்கையில் தமிழக அரசு செயல்படும் என்றார்.