துணை முதலமைச்சர் பதவியை ஒரு பதவியாகவே தான் கருதவில்லை என்றும், அதை ஒரு கூடுதல் பொறுப்பாக உணர்வதாக, உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்தது பற்றி விமர்சித்த இபிஎஸ்-க்கு பதிலளித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் செங்கோட்டையன், செம்மலை, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை தாண்டி இபிஎஸ் எப்படி முதல்வர் ஆனார்? என்ற கதையை மக்கள் அறிவார்கள் என்று தெரிவித்தார். மேலும், மற்றவர்களை விமர்சிப்பதற்கு முன்பாக, இபிஎஸ் யோசித்து பார்த்து பேச வேண்டும் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.