தாம் எழுதிய எஸ்ஐஆர் குறித்த புத்தகத்தை படித்தால் விஜய் ஆர்ப்பாட்டமே வேண்டாம் என முடிவு செய்வார் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பீகார் தேர்தல் தமிழகத்திற்கு பாடத்தை சொல்லி கொடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், எஸ்ஐஆர் நடவடிக்கையால் வாக்குகள் பறிபோகும் என தவெக தலைவர் விஜய் கூறிய நிலையில் வாக்குகள் எப்படி பறிபோகும்? என்று கேள்வி எழுப்பினார்.