மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக வாக்குகளை அறுவடை செய்ய திமுக நினைக்கிறதா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாவட்டம் வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனடைய விடுபட்ட மகளிர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளதாகவும், தேர்தலுக்கு 9 மாதங்கள் உள்ள நிலையில், இப்போது இந்த திட்டத்தை மீண்டும் கையிலெடுக்க காரணம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.