தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பான எந்த பணிகளையும் சட்டத்திற்கு உட்பட்டு செய்ய வேண்டுமென நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். மாநாடு நடத்த 25 குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், மாநாட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் கட்டாயம் தலைகவசம் அணிந்து வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.