இந்தியாவில் வலிமையான பிரதமர் என்று உலக நாடுகளின் தலைவர்கள் போற்றி புகழும் அளவிற்கு பிரதமர் மோடி திகழ்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகழாரம் சூட்டியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்புகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.