தமிழக மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி, சட்டம் ஒழுங்கை சீர்குலைய செய்துள்ள திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுத அதிமுக தொண்டர்கள் கண் அயராமல் களப்பணியாற்ற வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்து எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 2026 தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைவதை எத்தனை சக்திகள் ஒன்றுகூடி வந்தாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.