கிராமப்புறங்களில் சிறுதொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு உரிம கட்டணம் என்பது ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பழைய சட்டம் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஏதோ திமுக அரசு புதிதாக கொண்டு வந்ததுபோல தனது வழக்கமான அவதூறு பிரச்சாரத்தை எடப்பாடி பழனிசாமி செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.