ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஏழைகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் மொழி ஆங்கிலம் என்பதால் அமித்ஷாவுக்கு பயம் என கருத்து தெரிவித்துள்ளார்.