அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவுடன் கள்ள உறவு வைத்துள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், 2026 தேர்தலுக்கு பிறகு, அதிமுகவுக்கு இபிஎஸ் முடிவுரை எழுதி விடுவார் என்று கூறினார். திமுகவுக்கு எதிராக எம்ஜிஆர் கண்டெடுத்த இரட்டை இலை சின்னம், இன்றைக்கு திமுகவின் வெற்றிக்கு உதவி கொண்டிருப்பது வருத்தம் அளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.