தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆடி திருவாதிரையையொட்டி பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வரவிருக்கிறார். நாளை மறுநாள் வரும் பிரதமரை சந்திப்பதற்காக இபிஎஸ் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால், எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 26 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த இபிஎஸ்சின் பயணம், 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.