கீழடி அகழாய்வு குறித்து உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளான ஓய்வுபெற்ற அதிகாரி பி.எஸ்.ஸ்ரீராமனிடமே மீண்டும் மூன்றாம் கட்ட அகழாய்வு குறித்து அறிக்கை கேட்ட மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கீழடி விவகாரத்தில் தொடர்ந்து தமிழர்களின் தொன்மையை மூடிமறைக்க உள்நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதை முதலமைச்சர் அம்பலப்படுத்தியதாக கூறியுள்ளார். பி.எஸ்.ஸ்ரீராமனிடம் அறிக்கை கேட்டிருப்பது மத்திய அரசின் உள் நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழ் நாட்டு மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தல் மூலம் மீண்டும் தக்க பாடம் புகட்டக் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.