காமராஜர் தனது சொந்த காசில் பள்ளிகளைத் திறக்கவில்லை என்று பேசியிருந்த திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜரை சிறுமைபடுத்தவோ, குறைத்து பேசவோ தனிப்பட முறையில் தனக்கு எவ்வித தவறான நோக்கமும் இல்லை என்ற அவர், காமராஜர் தமிழ் பேரினத்தின் சொத்து எனவும் கூறியுள்ளார்.