சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இது தொடா்பாக திமுக பொதுச்செயலாளா் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலங்களவை மற்றும் மக்களவை திமுக உறுப்பினா்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று மாலை 7 மணியளவில் நடைபெற உள்ளதாகவும், இதில், எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் வரும் 25ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தில், திமுகவின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடா்பாக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்க உள்ளாா்.