வெள்ள பாதிப்பை சரியாக கையாளாவில்லை என்றும் மக்களை திசை திருப்பவே, தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்னையை திமுக கையில் எடுத்துள்ளதாகவும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சாடியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடி தொலைக்காட்சியில் நடந்த தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக்கு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆளுநர் எப்படி பொறுப்பாக முடியும் என்றார். திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிகளில் இந்தி ஒரு பாடமாக உள்ளதால் அந்த பள்ளிகளை அவர்கள் மூடத் தயாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.