திமுக கூட்டணி கட்சிகள் சிறுபான்மை மக்களை திசைதிருப்புவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் பிரச்சாரம் செய்த அவர், சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவது அதிமுக மட்டும்தான் என்றார். மேலும், அ.தி.மு.க. ஆட்சியில் எந்த சிறுபான்மை மக்களும் பாதிக்கப்படவில்லை என்றார்.