2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தேமுதிக தயங்காது எனவும், கூட்டணிக்கு காலம் தான் பதில் சொல்லும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ராஜ்யசபா சீட் தருவதாக எழுதிக் கொடுத்துவிட்டு அதை மாற்றிப் பேசிய போது அதிர்ச்சியாக இருந்ததாகவும், அரசியல் நாகரிகம் கருதி அதனை வெளியிடவில்லை என தெரிவித்தார். மேலும் எங்கள் வீட்டு பையன் விஜய் புதிதாக கட்சி தொடங்கியிருக்கிறார், கூட்டணி குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என கூறினார்.