மத்திய அரசிடமிருந்து நிதி வராததால் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் பணியாற்றும் 32 ஆயிரத்து 500 பணியாளர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாததற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் நிதியை வழங்க வேண்டும் என்றும் அதற்காக காத்திருக்காமல் தமிழக அரசே ஊதியம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.