தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான டிஏபி அடி உரத்தை வழங்க ஆவணம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு மதிமுக எம்பி துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பான அவரது அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் தனியார் உரக்கடையில் டிஏபி உரம் வாங்கச் சென்றால், அதனுடன் சேர்த்து வேறு ஏதாவது உரத்தை வாங்கும்படி வற்புறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். ஒரு உரத்தை வாங்கும் போது மற்றொரு உரத்தையும் சேர்த்து விற்க வேண்டுமென உர நிறுவனங்கள் அறிவுறுத்துவதாக தனியார் உர விற்பனையாளர்கள் புகார் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள துரை.வைகோ, இதுபோன்ற நிலை தமிழ்நாடு முழுவதும் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.