வக்ஃப் சட்டத் திருத்த விவகாரத்தில் இஸ்லாமிய அமைப்புகளின் உணர்வுகளும்,கருத்துகளும் மதிக்கப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வக்ஃப் சட்ட திருத்த முன்வரைவுக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு சென்னையில் கருத்து கேட்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், மத்திய அரசின் இந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கை பயனுள்ளதாக அமைவதை குழு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வக்ஃப் சட்டத்திருத்த முன்வரைவில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு அனைவராலும் ஏற்கப்படும் ஒன்றாக மாற்றப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.