சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது கோரிக்கையை ஏற்று தைப்பூசத்திற்குப் பொது விடுமுறை அளித்தது, காவிரிப் படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்தது, நீட் தேர்விலிருந்து கிராமப்புற ஏழை அரசுப்பள்ளி மாணவர்களை பாதுகாக்கும் வகையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது, தமிழ்நாட்டிற்கு 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்தது என அரும்பணி ஆற்றிய எடப்பாடி பழனிசாமி, இன்னும் பல ஆண்டுகள் உடல் நலனுடனும், உள்ள மகிழ்வுடனும் நலமோடு வாழ்ந்து மக்கள் தொண்டாற்றிட வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.