தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கணினி அறிவியலை தனிப்பாடமாக அறிவிக்க தமிழக அரசு மறுத்து வருவது பிற்போக்குத்தனமானது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார். இன்றைய உலகில் கணினி அறிவியல் என்பது தவிர்க்க முடியாத விஷயமாக இருக்கும் நிலையில், அதனை தனிப்பாடமாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.