தமிழ்நாடு நாளை முன்னிட்டு, எல்லைப் போராட்ட தியாகிகளை போற்றி வணங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்த எக்ஸ் பதிவில், தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள் நவம்பர் 1 எனவும், தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காக போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.