அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் பேச்சுகள் இருக்கக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிமழை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் துறை ரீதியான பணிகளை விரிவுபடுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.