அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தின் சுயவிவரக் குறிப்பில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் என மாற்றியுள்ளார். தமிழக அமைச்சரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகவும், பொன்முடி, ராஜகண்ணப்பன், மதிவேந்தன் உள்ளிட்டோரின் துறைகள் மாற்றப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டதையடுத்து தனது எக்ஸ் பக்கத்தின் சுயவிவரக்குறிப்பில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் என இருந்ததை, தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் என உதயநிதி ஸ்டாலின் மாற்றியுள்ளார்.