விளைச்சல் பாதிப்பு, உரிய விலையின்மை என ஏற்கனவே பல இன்னல்களை தமிழக விவசாயிகள் சந்தித்து வரும் நிலையில், தற்போது நிலத்தடி நீருக்கும் வரி என்பது அவர்களை விவசாயத்தை விட்டே வெளியேற்றக் கூடிய ஆபத்தை உருவாக்கும் வகையில் உள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உணவு உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள வரி விதிப்பு முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.