கோயில் நகர் மதுரைக்கும், தென்னிந்திய மான்செஸ்டர் கோவைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் இல்லை என்று, மத்திய அரசு நிராகரித்துள்ளதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல என சாடினார். சென்னை மெட்ரோ பணிகளை முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறியதை போல், மதுரை - கோவையிலும் மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். இதையும் பாருங்கள் - "மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம்" முதல்வர் உறுதி | CMStalin | MetroProjectTN | TNPolitics