தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்த பாமக தலைவர் அன்புமணி, குறிப்பிட்ட சமூகம் குறித்த விவரங்கள் தெரியாவிட்டால் எப்படி அவர்களுக்கான சிறப்பு திட்டங்களை உருவாக்க முடியும் என கேள்வி எழுப்பினார். தமிழக மக்கள் உரிமை மீட்பு என்ற பெயரில் திருவள்ளூரில் நடைப்பயணம் மேற்கொண்ட போது மக்கள் மத்தியில் இவ்வாறு பேசினார்.