தமக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தொடர்ந்துள்ள தேர்தல் வழக்கை ரத்து செய்யக்கோரி, நெல்லை காங்கிரஸ் எம்பி ராபர்ட் புரூஸ் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பான வழக்கு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தாம் தொடர்ந்துள்ள தேர்தல் வழக்கு விசாரணைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ராபர்ட் புரூஸ் மனு தாக்கல் செய்திருப்பதாகவும், விசாரணைக்கு தடை கோரிய அவரது மனுவை ஏற்கனவே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகவும் நயினார் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, ராபர்ட் புரூஸ் மனு மீதான விசாரணையை ஜூலை 24 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.