குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். குரூப்-4 தேர்வு குளறுபடிகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.