மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ், தண்ணீர் டேங்க், தற்காலிக கழிவறை, பேருந்து சேவை எத்தனை இடங்களில் இருந்தன..? என்பதனை வீடியோ ஆதாரத்துடன் காட்ட முடியுமா என அமைச்சர் மா.சுப்ரமணியத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள அவர், இறப்பை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றார்.