எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்திருக்கும் அரசு இல்லத்திற்கு நேற்று மாலை 6.45 மணியளவில் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதையடுத்து, அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் வீட்டை சோதனையிட்டனர். சந்தேகப்படும் படியான பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படாத நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை அதிகாரிகள் உறுதி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.