கூட்டணி குறித்து பேச தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தது கட்சி சார்ந்த சந்திப்பு இல்லை என விளக்கமளித்தார்.