இந்தியா கூட்டணியை எதிர்த்து வரும் 30-ம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா கூறினார். சென்னை தியாகராய நகர் கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இட ஒதுக்கீட்டை நீக்குவதாகக் கூறிய ராகுல் காந்தி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் முதல்வரின் காப்பீட்டு திட்டம் 2 லட்சம் ரூபாய்தான் எனவும், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுவதாகவும், இத்திட்டத்தில் இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பலனடைந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.