பாஜகவின் தேசிய தலைவராக முதன்முறையாக மூத்த பெண் நிர்வாகி தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவில் புதிய தேசிய தலைவரை நியமிக்கும் பணிகள் துவங்கி உள்ளன. இப்போது தலைவராக இருக்கும் நட்டாவின் பதவிக்காலம் 2023 ல் முடிந்து விட்டாலும் 2024 வரை அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் பெண் தலைவர் ஒருவரை தேசிய தலைவராக கொண்டுவர முடிவு செய்யப்பட்டு நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ஆந்திர முன்னாள் மாநில தலைவர் புரந்தேஸ்வரி, பாஜக மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் இவர்களில் ஒருவருக்கு வாய்ப்பளிக்கபடலாம் என தெரிகிறது. பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடிவு செய்து. பெண்களின் வாக்குகளை கவர பெண் தலைவரை நியமிக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.